முன்குறிப்பு – இக்கதையில்(கடிதத்தில்) வரும் பெயர்களும், சம்பவங்களும் யாரையும் குறிப்பிடுவன அல்ல,முற்றிலும் கற்பனையே (இப்படி சொன்னா நம்பவா போறீங்க).
முன்னுக்கு பின் முரணான குறிப்பு – சம்பந்தபட்ட நபர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அவர்கள் பெயர்,ஊர், நாடு, மொழி ஆகியவை மாற்றப்பட்டுள்ளது.
டுமிழ் சினிமாவின் நம்பர் மூனு நாயகி ( நம்பர்களில் தனக்கு நம்பிக்கை இல்லை என பல முறை கூறிவிட்டார் ,இருந்தாலும் அவர்தான் நம்பர் ஒன் ஏனென்றால் அவரது போட்டி நடிகை நயன்னாக இருப்பதால்,இப்போதைக்கு மூனு தான் நம்பர் ஒன்)
கெலுங்கு சினிமாவின் நாயகர்கள், நடிகர்கள், ரசிகர்கள்,சிறுவர்கள்,வயோதிகர்கள்,அரவாணிகள் என பாரபட்சமே இல்லாமல் தன் கவர்சியான அங்க அசைவால் அனைவரது தூக்கத்தையும் கெடுத்தவரும்மான, நினைத்தாலே சில்லிட செய்யும் நாயகி ஷிரிஷா லேட்டஸ்டாக எழுதிய காதல் கடிதம்,யாருக்கு எழுதியிருக்கிறார் என்பதை படித்து அறிந்து,தெரிந்து,புரிந்துகொள்ளுங்கள் முடிந்தால்.
சென்னை
தேதி : காதலுக்கு உகந்த தேதி
எனதருமை புகாமாவிற்கு, உங்கள் “டிரீம் கேள், கிளாமரஸ் பியூட்டி” ஷிரிஷா எழுதுவது.பேரிக்கா நாட்டின் அதிபராக இருக்கும் உங்களுக்கு ஆங்கிலத்தில் எழுதாமல் தமிழில் கடிதம் எழுதுவதற்கு மன்னிப்பு கேட்கமாட்டேன்.,ஏனென்றால் காதலர்களுக்கு பிடிக்காத ஒரே வார்த்தை “மன்னிப்பு” என்று எங்கள் இளம் நாயகன் கூறி இருக்கிறார்.சரி அதை விடுங்கள் நான் ஏன் தமிழில் எழுதுகிறேன் என்றால் எனக்கு ஆங்கிலமே அரைகுறையாய்த்தான் தெரியும்,இங்கு எவர்க்கும் அது கூட தெரியாததால் நான் பெரிய ஆங்கில புலமை வாய்ந்தவள் என புரளியை கிளப்பிவிட்டார்கள் நானும் அப்படியே அது “கெவுரதையா” இருக்கட்டுமேனு மெயிண்டெய்ன் பண்ணிக்கிட்டேன்.மனம் கவர்ந்தவரிடம் எதையும் மறைக்க கூடாது என்பதற்காக இதுவரை கட்டிக்காத்து வந்த ரகசியத்தை சொல்லிவிட்டேன் என் மணவாளா.
பேரிக்க நாட்டின் சிம்மாசனத்தில் நீ ஏறுவதற்கு முன்பே நீ என் மனதில் குடியேறி சப்பணாங்கால் போட்டு உட்காந்து கொண்டாய். நீ என்னதான் “புகாமா” என உன் பெயரை வைத்திருந்தாலும் என் மனதுக்குள் புகுந்துவிட்டாய் புவிஅரசனே.
இது உங்களுக்கு நான் எழுதும் முதல் காதல் கடிதம் ஆனால் எனக்கு எழுபத்திஏழாவது கடிதம் இது.மீதம் எழுபத்தி ஆறு கடிதங்கள் யாருக்கு எழுதினாய் என கேட்க்கும் அளவிற்கு நீ குறுகிய புத்தி கொண்டவன் இல்லை என்பது எனக்கு தெரியும் என் சொக்க தங்கமே.இதற்கு முன்பு இங்கிருக்கும் சில அல்ர சில்ர நடிகர்களான குஷால், வெம்பு ஆகியவர்கள் என்னை கரெக்ட் பண்ண என்னென்னவோ சர்கஸ்செல்லாம் செய்து பார்த்தார்கள்,பார்டிக்கு அழைத்து போய் ஃபுல் போதை வாங்கித்தந்தான் வெம்பு, எதற்க்கு வம்பு என போதை தெளிந்ததும் கலற்றிவிட்டேன், குஷால் லேசுப்பட்டவனா லேப்-டாப்பெல்லாம் வாங்கித் தந்தான் எனக்குத்தான் அந்த குதிரை மூஞ்சியானை பிடிக்கவில்லை எப்படி பிடிக்கும் உங்கள் அழகு முகம் முத்திரையாய் எனது இதயத்தில் இருக்கும் போது என் கருப்பு தங்கமே.
“கருப்புதான் எனக்கு பிடிச்ச கலரு..உன் கண்ணு ரெண்டும்’ பாடல் கேட்கும் போதெல்லாம் நான் உன்னை நினைத்து வெட்கத்தில் முகம் சிவந்து போவேன். உனக்கு சிவந்தாலும் வெளியே தெரியாது என் கள்ளா..வருத்தப்படாதே எங்கள் நாட்டில் “ஃபேர் அண்டு லவ்லி” என்றோரு சிகப்பழகு கிரீம் இருக்கிறது..திருமணத்திற்கு பின் அந்த கிரீமை தேய்த்து தேய்த்தே உங்களையும் என்னை போன்று சிகப்பாக்கிவிடுறேன்.
உங்கள் மனதில் நான் இருக்கிறேனா இல்லையா என்ற குழப்பத்தில்தான் இதுவரை நான் கடிதம் எழுதாமல் இருந்தேன்,ஆனால் எங்கள் கலாச்சார தூதுவர் சொன்ன விசயம் என்னை காதலில் பறக்க வைத்துவிட்டது.
என் குளியலறை காட்சி கொண்ட சி.டி யை பார்த்துவிட்டு நீங்கள் கிறுகிறுத்து போய் “ஷி இஸ் ஹாட்..’ என பெருமூச்சுடன் சொன்னதாக தூதுவர் என்னிடம் கூறியதும் நான் நானி,வெட்கி காதலில் கசிந்துருகிவிட்டேன்.அப்போதே முடிவு செய்துவிடேன் அல்ர சில்ர பசங்கெல்லாம் இனி வேணாம்,புகாமாதான் எல்லாம் என. இருந்தாலும் உங்கள் மீது எனக்கு செல்லமான கோபம் , நான் கெழுங்கு மொழியில் நடித்த “குடிச்சுபுட்டு குத்துவிடேன்னா..” படம் ஒரு வருடம் ஓடியது நீங்கள் அதை பார்க்காமல்,குளியலறை சி.டியை பார்த்தது வருத்தம்தான் ஏனென்றால் அந்த படத்தில் சி.டியில் இருப்பதைவிட கவர்சியாக இருப்பேன் ,படம் முழுக்க குளித்து கொண்டும் இருப்பேன்.என்னிடம் கேட்டிருக்கலாமே அன்பே.
நீங்கள் அடுத்த முறை என்னை பார்க்க வேண்டும் என்றால் என்னிடம் கூறுங்கள், நான் பேரிக்கா நாட்டிற்கு ஷூட்டிங் வரும்போது நேரிலேயே வந்துவிடுகிறேன்..ஹி..ஹி.. இது வெட்க சிரிப்பு.
இங்கிருக்கு பிசின் நடிகையெல்லாம் மந்தி மொழியில் நடிப்பதற்கே பீத்திக்கொள்கிறார்கள்,பாவம் அவர்களுக்கு தெரியாது நீங்கள் மனது வைத்தால் நான் உலகில் உள்ள அனைத்து மொழிகளிலும் பல அவார்டுகளை வாங்க முடியுமென்று.
உங்கள் இதயத்தையும் சேர்த்து எனக்கு இரண்டு இதயம் என்பதை சொல்லாமல் சொல்லத்தான் இதயத்திற்கு நேரே என் நெஞ்சில் பச்சை குத்தியிருக்கிறேன் என் காதலா. நீங்கள் கவனித்திருப்பீர்கள் நிச்சயமாக கள்ளன் ஆயிற்றே நீங்கள்.
விரைவில் பதிலை எதிர்பார்க்கிறேன் என் புஞ்சிகுட்டி,அஜ்ஜுகுட்டி என் ப்ளாக் ஃபாரஸ்ட் கேக்கே. இக்கடிதத்தோடு என் ரவாலட்டு முத்தங்களையும் அனுப்புகிறேன் ரகசியமாக அனுபவிக்கவும் என் ரகசிய சினேகிதா.
அப்புறம் நமது காதலைப் பற்றி யார் கேட்டாலும், எங்களுக்கு இடையில் இருப்பது வெறும் நட்புதான் என்று பதிலலிக்கவும்.ஏனென்றால் நமது பொதுவாழ்க்கையில் இது சிக்கலை உருவாக்கும்.காலம் வரும்போது உலகிற்கு சொல்வோம்.அதுவரை ரகசிய காதலனுக்கு ரகசிய காதலியின் ரகசிய முத்தங்கள்.
இப்படிக்கு
இதுவரை உலகிற்கே கனவு கன்னி, இன்று முதல் உங்களுக்கு மட்டும் கனவுகன்னி
“டிரீம் கேள், கிளாமரஸ் பியூட்டி”
ஷிரிஷா
எழுதிவிட்டு அக்கடித்தை ஜெராக்ஸ் எடுக்க சொல்லி வேலைக்காரியிடம் சொன்னாள். “எதிர்காலத்தில் பல கோடிகளுக்கு ஏலம் போகப்போகும் காதல் கடிதம்டீ காப்பி எடுத்து பத்திரமா வை” என்று கூறிவிட்டு.,கடிதத்தை நாக்கினால் ஈரப்படுத்தி ஒட்டினால், “இவனமட்டும் எப்படியாவது மடக்கிப்போட்டோம்னா இவன் பேர சொல்லியே இங்க ஒரு கட்சி ஆரம்பிச்சு எல்லாப்பயலயும் ஆட்டிபடச்சிடலாம்”என மனதிற்குள் நினைத்தவாறு.,முகவரி எழுத ஆரம்பித்தாள், உங்கள் எங்கள் உலகின் ,மன்னிக்கவும் “புகாமா”வின் கனவு கன்னி..(?).
